Wednesday, January 22, 2014

ஆத்தங்கரை மரமே அரச மர இலையே

Music : A. R. Rahman
Lyrist(s) : Vairamuththu
Singer(s) : Sujatha, Mano


அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
 பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே
 பட்டாம்பூச்சி பிடித்தவள்
 தாவணிக்கு வந்ததெப்போ
 மூன்றாம் பிறையே நீ முழு நிலவா ஆனதெப்போ
 மெளனத்தில் நீ இருந்தால்
 யாரை தான் கேட்பதிப்போ.....

 ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
 ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
 ஆத்தங்கரை மரமே அரச மர இலையே
 ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
 ஓடைக்கர ஒழவு காத்துல ஒருத்தி யாரு
 இவ வெடிச்சி நிக்குற பருத்தி
 தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா
 தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
 உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
 அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது

 ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
 ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

 ஏ..ஏ..ஏ..ஏ..ஏலலோ..ஏலலோ..
 ஏலலோ..ஏல..லோ..ஏலே..ஏ..
 மாமனே உன்னை காண்காம
 வட்டியில் சோறும் உண்காம
 பாவி நான் பருத்தி நாரா போனேனே
 காகம் தான் கத்தி போனாலோ
 கதவு தான் சத்தம் போட்டாலோ
 உன் முகம் பாக்க ஓடி வந்தேனே
 ஒத்தையில் ஓடைக்கரையோரம்
 கத்தியே உன் பேர் சொன்னேனே
 ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம்
 கத்தியே உன் பேர் சொன்னேனே
 அந்த இரயில் தூரம் போனதும்
 நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
 முத்து மாமா என்னை விட்டு போகாதே
 என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே

 ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
 ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

 தாவணி பொண்ணே சுகந்தானா
 தங்கமே தளும்பும் சுகந்தானா
 பாறையில் சின்ன பாதம் சுகந்தானா
 தொட்ட பூ எல்லாம் சுகந்தானா
 தொடாத பூவும் சுகந்தானா
 தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா
 அயித்தயும் மாமனும் சுகந்தானா
 ஆத்துல மீனும் சுகந்தானா
 அயித்தயும் மாமனும் சுகந்தானா
 ஆத்துல மீனும் சுகந்தானா
 அன்னமே உன்னையும் என்னையும்
 தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா
 மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
 உன் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு

 ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
 ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
 ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
 ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே

 ஓடக்கர ஒழவு காத்துல ஒருத்தி யாரு
 இவ வெடிச்சி நிக்குற பருத்தி
 தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா
 தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா

 உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
 அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது

 ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
 ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே.

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி

Music : A. R. Rahman
Lyrist(s) : Pazhani Bharathi
Singer(s) : Sujatha, T.L.Maharajan



நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிறங்கி போனேன்டி

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிறங்கி போனேன்டி

அடியே சூடான மழையே உடம்பு நனைஞ்சுகலாமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்கலாமா

நீ கட்டும் வேட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையில கிறங்கி போனேனே

நீ கட்டும் வேட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையில கிறங்கி போனேனே
வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினாலே ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில் தேனை எடுத்துக்க மாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்க மாமா

நீ வெட்டி வேட்டி போடும் நகத்தில் எல்லாம்
ஏய் குட்டி குட்டி நிலவு தெரியுதடி
உன் இடுப்பழகில் உரசும் கூந்தலிலே
பத்திகிட்டு மனசு எரியுதடி

சிக்கி முக்கி கல்லை போலே என்னை சிக்கலிலே மாட்டதே
தாலி ஒண்ணு போடும் வரை என்னை வேறெதுவும் கேட்காதே

அந்த வானம் பூமி எல்லாம் இங்கே ரொம்ப ரொம்ப பழசு
அடி நீயும் நானும் சேர்ந்திருக்கும் காதல் தாண்டி புதுசு

வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா
மனசு ஆசையினலே ஊஞ்சல் ஆடுது மாமா
மலரும் தாவணி பூவில் தேனை எடுத்துக்க மாமா
கொலுசு பொட்ட காலில தாளம் பொட்டுக்க மாமா

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிறங்கி போனேன்டி

நீ கட்டும் சேலை மடிப்புல நான் கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சமபழ நிற இடுப்புல கிறங்கி போனேன்டி
அடியே சூடான மழையே உடம்பு நனைஞ்சுகாலமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுத்துக்கலாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா

மாமா நீங்க தூங்கும் மெத்தையிலே
என்னோட போர்வை சேர்வதிப்போ
மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே
என்னோட துடிப்பை கேட்பதெப்போ

என் ஆயுள் ரேகை எல்லாம்
உன் உள்ளங்கையில் ஓடுதடி
உன் உள்ளங்கை அழகினிலே
ஆசை உச்சி வரை ஊறுதுதடி

நான் சூடும் பூவில் உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது
என் கழுதுகிட்ட முத்தம் தந்து  மீசை தண்டு  மயிலிறகா குத்துது

அடியே சூடான மழையே உடம்பு போல் நனைஞ்சுகாலமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்கலாமா

நீ கட்டும் வேட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையில கிறங்கி போனேனே

நீ கட்டும் வெட்டி மடிப்புல நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையில கிறங்கி போனேனே
அடியே சூடான மழையே உடம்பு போல் நனைஞ்சுகாலமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி பூவே தேனை எடுதுக்கலாமா
கொலுசு பொட்ட காலிலே தாளம் பொட்டுக்கலாமா