Saturday, June 16, 2012

உன் பனித்துளி பனித்துளி

Album:-Kanda Naal Muthal
Singers:- Kay Kay, Shreya Ghoshal, Tanvi Shah
Music:- Yuvan Shankar Raja
Lyrics:-




கரு கரு கரு கரு
கண்ணு பட்டு
வாடிவுடும் வாசமல்லி
சந்தனத்தை பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது
எப்போவென்னு மாமியாரு
கேட்கும் முன்னே
அரை டஜன் பெத்து கொடுங்க

தக தக தக தக
தங்க சில தவிக்குது
வெட்கத்திலே போதும்
அதை விட்டுவிடுங்க

ஆராரிராரோ ஆராரிரரோ
நாளைக்கின்னு தேவைப்படும்
தாளத்துல
ஒன்னு ரெண்டு கத்துக்கொடுங்க

உன் பனித்துளி பனித்துளி பனித்துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பறித்து
வெளிச்சம் தரும் இரவு
காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே

விரல்களும் நகங்களும்
தொட்டு கொண்ட நேரங்கள்
எண்ண அதை பார்த்ததில்லை
என்ற போதும் நூறுகள்
ஏதோ ஒரு தென்றல் மோதி
மெல்ல மெல்ல மாறினோம்
உன்னை நானும் என்னை நீயும்
எங்கே என்று தேடினோம்
நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம்
தனிமையில் நெஞ்சுக்குள்ளே பேசலானோம்
பேசும் போதே பேசும் போதே
மௌனம் ஆனோம்

முகத்திரை குள்ளே நின்று
கண்ணாம்பூச்சி ஆடினாய்
பொய்யாய் ஒரு மாலை கட்டி
பூவை செய்து சூடினாய்
நிழல்களில் உள்ளே உள்ள
நிஜங்களை தேடினேன்
நீயாய் அதை சொல்வாய் என
நித்தமும் நான் வாடினேன்
சொல்ல நினைத்தேன்
ஆனால் வார்த்தை இல்லை
உன்னை விட்டால் யாரும்
எந்தன் சொந்தம் இல்லை
சொந்தம் என்று யாருமினி
தேவை இல்லை.


Video Link


நதியே நதியே

Album:-Rhythm
Singers:- Unnimenon
Music:- A.R.Rahman
Lyrics:- Vairamuththu



தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ

சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே
தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)
தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்…
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்…

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா


Video Link



உன் சிரிப்பினில்

Album:-Pachaikili Muthucharam
Singers:- Sowmya Raoh, Raphi
Music:- Harris Jayaraj
Lyrics:- Thamarai




உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண்ணிமைகளின்
மின்பார்வையில் மீதியும் தேய
ம் இன்று நேற்று என்று இல்லை

என் இந்த நிலை

ம் உன்னைக்கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை
உன் சிரிப்பினில்...

உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்துநிலவை அழைக்கும்
இதழின் விளிம்பு துளிர்க்கும்
என் இரவினை பனியினில் நனைக்கும்
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே
ஒருமுறை அல்ல முதல்முறை அல்ல
தினம்தினம் என்னை சூழும் தீ
உன் சிரிப்பினில்...

முதல்நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு
உறக்கம் விழிப்பில் கனவாய்
உனைக்காண்பதே வழக்கம் எனக்கு
அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்
முதல்முதல் இன்று நிகழ்கிறதென்று
நடிப்பது கொஞ்சம் வஞ்சமே

உன் சிரிப்பினில்...
ம் இன்று நேற்று...


Video Link





பூவே வாய் பேசும்

Album:-12B
Singers:- Harish Ragavendra , Mahalakshmi
Music:- Harris Jayaraj
Lyrics:- Vairamuththu



பூவே வாய் பேசும் போது
காற்றே ஓடாதே நில்லு
பூவின் பொழி கேட்டுக் கொண்டு
காற்றே நல் வார்த்தை சொல்லு
குளிர் வார்த்தை சொன்னால்
கொடியோடு வாழ்வேன்
என்னைத் தாண்டிப் போனால்
நான் வீழுவேன்
மண்ணில் வீழ்ந்த பின்னும்
மன்றாடுவேன்


பூவே....

பூக்களைத் தொடுத்து
உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்
களித்திருப்பேன் அன்பே

பூக்களை....

காதலன் ஆணைக்குக்
காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில்
பூத்திருப்பேன்
உன் சுவாசப் பாதையில்
நான் சுற்றி திரிவேன்
உன் சுவாசப்....

என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கின்றாய்
என்ன நான் சொல்வேன்

நீ ஒரு பார்வையால் நெருங்கி விடு என்னை
நீ ஒரு வார்த்தையால் நிரப்பி விடு என்னை

நீ....

நேசத்தினால் என்னை கொன்றுவிடு
உன் நெஞ்சுக்குள்ளே என்னை.
என் நினைவு தோன்றினால்
துளி நீரை சிந்திடு
நேசத்தினால்...

அடி நூறு காவியம் சொல்லித் தோற்றது
இன்று நீ சொன்னது

Video Link



சர சர சார காத்து

Album:-Vagai Sooda Vaa
Singers:- Chinmayi
Music:- Jifraan
Lyrics:- Vairamuththu




சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...

டீ போல நீ... என்ன ஏன்... ஆத்துற

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே

எங்க ஊரு பிடிக்குதா... எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல... சுட்ட ஈரல் மணக்குதா
முட்டை கோழி பிடிக்கவா... முறை படி சமைக்கவா
எலும்புங்க கடிக்கயில்... என்ன கொஞ்ச நினைக்க வா
கம்மஞ்சோறு ருசிக்க வா... சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்க வா
மொடகத்தா ரசம் வச்சு மடக்க தான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு காவ காக்குறேன்
முக்கண்ணு நொங்கு நான் விக்கிறேன்
மண்டு நீ கங்கைய கேக்குற

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே

புல்லு கட்டு வாசமா... புத்திக்குள்ள வீசுற
மாட்டு மணி சத்தம்மா... மனசுக்குள் கேக்குற
கட்ட வண்டி ஓட்டுற... கையளவு மனசுல
கையெழுத்து போடுற... கன்னி பொண்ணு மார்புல
மூனு நாளா பாக்கல... ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டு கல்லு குழியில ஒறங்கி போகும் பூனையா
உன்னை வந்து பாத்து தான் கிறங்கி போறேன்யா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...
இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க

ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...
டீ போல நீ... என்ன ஏன்... ஆத்துற
காட்டு மல்லிக பூத்திருக்கு காதலா காதலா
வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்கு என்ன காச்சலா


Video Link



இதயம் இந்த இதயம்

Album:-Billa2
Singers:- Sweta Pandit
Music:- Yuvan Shankar Raja
Lyrics:- N.Muththukumar

இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில் மாட்டிக்கொண்டு
உயிர் தத்தளித்து துடிக்கிறதே
காயம் யாவையும் தேற்றிக்கொண்டு
இது மறுபடியும் நினைகின்றதே
உள்ளுக்குள்ளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்

வேண்டும் வேண்டும் என்று கேட்கையிலே
வேண்டாம் வேண்டாம் என்று சொல்லுமே ..
வேண்டாம் வேண்டாம் என்று விலகி நின்றால்
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே ..
இது தவித்திடும் நெருப்பா
இல்லை குளிர்ந்திடும் நீரா
இது பனி எரிமலையா
இதை அறிந்தோர் யாருமில்லை
உள்ளத்திலே அறை உண்டு வாசல் இல்லை
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை

தூங்கும் போதும் இது துடித்திடுமே
ஏங்கும் போதும் இது வெடிக்கும்
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்
வேண்டும் என்றே இது நடிக்கும்
இது கடவுளின் பிழையா
இல்லை படைத்தவன் கொடையா
கேள்வி இல்லா விடையா
இதை அறிந்தோர் யாருமில்லை
இதயம் இல்லை என்றால் என்ன நடக்கும்
கண்ணீர் என்னும் வார்த்தையை வழி இயக்கும்

இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ




Video Link

என்னை பந்தாட பிறந்தவளே

 Album:-Ullam Ketkume
 Singers:- Srinivas & Mathumiththa
 Music:- Harris Jeyaraj
 Lyrics:-  




என்னை  பந்தாட  பிறந்தவளே 
இதயம்  ரெண்டாக  பிளந்தவளே 
ஓசை  இல்லாமல்  மலர்ந்தவளே 
உயிரை  கண்  கொண்டு  கடைந்தவளே 
உன்னை  கண்ட  பின்  இந்த  மண்ணை  நேசித்தேன் 
காலம்  யாவும்  காதல்  கொள்ள  வாராயோ 

(என்னை  பந்தாட ...)

செங்குயிலே  சிறு  வெயிலே 
மண்ணில்  உள்ள  வளம்  இன்ன இன்ன தென்று  
செயற்கை  கோள்  அறியும்  பெண்ணே 
உன்னில்  உள்ள  வளம்  என்ன தென்ன தென்று 
உள்ளங்கை  அறியும்  கண்ணே 
நீ அழகின்  மொத்தம்  என்று  சொல்லு 
அந்த  பிரம்மன்  வைத்த  முற்று  புள்ளி 
செங்குயிலே ... சிறு  வெயிலே ...
வாய்  திறந்து  கேட்டுவிட்டேன்  
வாழ்வை  வாழ  விடு  அன்பே 

இனியவனே  இளையவனே
உன்னை  காணவில்லை  என்னும்  போது 
நெஞ்சில்  சின்ன  பைத்தியங்கள்  பிடிக்கும் 
பஞ்சு  மெத்தைகளில்  தூக்கம்  இல்லை  என்று 
பற்கள்  தலையணையை  கடிக்கும் 
உன்னை  தொட்டு  பார்க்க மனம்  துடிக்கும் 
நெஞ்சில்  விட்டு  விட்டு  வெடி  வெடிக்கும் 
சின்னவனே ... என்னவனே ...
மூக்கு  மீது   மூக்கு  வைத்து 
நெற்றி  முட்டிவிட  வாராய் 

(என்னை  பந்தாட ...)
 
Video Link