Sunday, November 18, 2012

அழகிய தென்றலே ஆடை கட்டும் மின்னலே


Composed By: Sri Shyamalangan
Vocals: Shankar Mahadevan
Lyrics: Rettai Pathai Segar





அழகிய தென்றலே ஆடை கட்டும் மின்னலே
திருமுகம் காட்டடி கோபம் என்ன என்னிலே
கொடி இடைக் காற்றோடு நாற்றாகி ஆடுதே
மனசில உன் பேரு மாறாத காதலாச்சு
மாறாப்பு ரோசாவே வீராப்பு ஏனடி
மாமன் நான்தானே ராசாத்தியே - (அழகிய)

வரப்பில் நீயும் போனா புல்லும் பூவா மாறுது
கொலுசு கொஞ்சிப் பேச நெல்லும் ஆட்டம் போடும் பாரு கண்ணே - ஒ.. ... ... .
அடியே சோளக் காட்டு பொம்ம கைய நீட்டுது
செடியில் தூங்கும் வண்டும் கண்ணத் திறந்து பார்க்கும் பாரு கண்ணே
உயிர் உன்னைத் தானே தேடுதே - பெண்ணே அது வேலி தாண்டி ஓடுதே

மயிலே மாமன் நெஞ்சில் பூத்த வாச மல்லியே
உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு கலக்கம் எதுக்கு மானே - (அழகிய)

வடக்கே வான வில்ல நேத்து நானும் பார்க்கையில்
நெனச்சேன் நெஞ்சில் உன்னை நேரில் என்னத் தேடி நீயும் வந்தே - ஒ.. ... ... .
கிழக்கே மேகம் ரெண்டு என்னைத் தாண்டி போகையில்
அழகே அந்த நேரம் தூறல் போல ஈரம் நீயும் தந்தே
அடி நாக்கில் ஆசை ஊறுதே கல் கண்டே - ஒரு முத்தம் கேட்கத் தோணுதே

உடனே காலம் ஓட சாமி கிட்ட வேண்டவா
கரும்பு மனசில் குறும்பு எதற்கு நலங்கு நடத்த வா வா - (அழகிய)

Source
http://www.shyamalangan.com/music/azhahiya-thendralae/




No comments:

Post a Comment