Tuesday, December 18, 2012

மூங்கில் தோட்டம், மூலிக வாசம்




Album:- Kadal
Singers:- Abhay Jodhpurkar, Harini
Music:- AR Rahman
Lyrics:- Vairamuthu




மூங்கில் தோட்டம், மூலிக வாசம்,
நெறஞ்ச மௌனம், நீ பாடும் கீதம்..
பௌர்ணமி இரவு, பனி விழும் காடு,
ஒத்தயடி பாதை, உன் கூட பொடிநட..
இது போதும் எனக்கு.. இது போதுமே...
வேறென்ன வேணும்?.. நீ போதுமே..
இது போதும் எனக்கு.. இது போதுமே...
வேறென்ன வேணும்?.. நீ போதுமே.. (மூங்கில் தோட்டம்)

குளத்தாங்கரையில, குளிக்கும் பறவைக,
சிறகு உலர்த்துமே, துளிக தெறிக்குமே..
முன்கோபம் விடுத்து, முந்தானை எடுத்து,
நீ மெல்ல துடைக்க, நான் உன்ன அணைக்க..
இது போதும் எனக்கு.. இது போதுமே...
வேறென்ன வேணும்?.. நீ போதுமே..
இது போதும் எனக்கு.. இது போதுமே...
வேறென்ன வேணும்?.. நீ போதுமே..

மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க,
ரத்தம் உறையும் குளிரும் இருக்க,
உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க,
ஒத்த போர்வையில இருவரும் இருக்க..
இது போதும் எனக்கு.. இது போதுமே...
வேறென்ன வேணும்?.. நீ போதுமே..
இது போதும் எனக்கு.. இது போதுமே...
வேறென்ன வேணும்?.. நீ போதுமே..(மூங்கில் தோட்டம்)





No comments:

Post a Comment